சென்னை,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடுகாரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை எழும்பூர், சேப்பாக்கம், தி.நகர், கிண்டி, கோடம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதன்படி ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், கொரேட்டூர், பல்லாவரம், விருகம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாபேட்டை, ஈக்காட்டு தாங்கல், புரசைவாக்கம், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், ரமாபுரம், அயனாவரம், குரோம்பேட்டை, அசோக் நகர், திருவி.க நகர், கோயம்பேடு, திருமுல்லைவாயல், மாதவரம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதேபோல் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மின்துண்டிப்பு ஏற்பட்டது.