செய்திகள்

திருவாரூரில், மினி பஸ் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி

திருவாரூரில் மினி பஸ் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பலியானார்.

திருவாரூர்,

திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று முன்தினம் மினி பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் கடந்து செல்ல முயன்ற 65 வயது மதிக்கதக்க முதியவர் மீது திடீரென மினிபஸ் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விஜயபுரம் கிராம நிர்வாக அலுவலர் துர்காராணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். விபத்தில் பலியான முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்