செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த பாதுகாப்புடன் வந்த வாக்குப்பெட்டிகள்

தேனியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது.

தேனி,

தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்ததையொட்டி வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவி ஆகியவை பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

இந்த வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்து வரப்பட்டன. துணை ராணுவ படை வீரர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் எடுத்து வரப்பட்டன. தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் வாக்குப்பெட்டிகள் கொண்டு வரப்பட்ட வண்ணம் இருந்தன. நேற்று இரவு வரையிலும் வாக்குப்பெட்டிகள் வந்த வண்ணம் இருந்தன.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, வாக்குப்பெட்டிகள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளில் இருந்தும், தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் இருந்தும் எடுத்து வரப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் இருந்து எடுத்து வருவதிலும், சாலை வசதி இல்லாத மலை கிராமங்களில் இருந்து குதிரைகளில் எடுத்து வருவதிலும் கூடுதல் பயண நேரம் ஆகும். இதுமட்டுமின்றி போடி அருகே டாப்ஸ்டேஷன் மலை கிராமத்தில் இருந்து வாக்குப்பெட்டிகள் கேரள மாநிலம் மூணாறு வழியாக ஜீப்களில் எடுத்து வரப்படுகின்றன. இதனால் நள்ளிரவு வரையும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து, அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் வைக்கப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) வாக்குப்பெட்டிகள் வைத்துள்ள அறைகளுக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படும் என்றார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு