புதுடெல்லி,
மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபைக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், மத்திய உளதுறை மந்திரி அமித் ஷா வரும் ஜன.30 அன்று மாலை மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து மேற்கு வங்காளத்தின் பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வரும் ஜன.31 அன்று நடைபெறும் அரசியல் பேரணியில் அவர் கலந்துகொள்வார் எனவும், பின்னர் அன்று மாலை மீண்டும் டெல்லி திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, மேற்கு வங்காளத்திற்கு கடந்த ஜன.17 அன்று பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்த நிலையில், தற்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பயணம் மேற்கொள்வது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.