புதுடெல்லி,
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இமாம்கார் நகரில் மசூதி ஒன்றில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தபோது, தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், 31 பேர் பலியானார்கள். 169 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இந்தியாவை பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், பாகிஸ்தானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இந்தியா இரங்கல் தெரிவிக்கின்றது.
இந்த விவகாரத்தில் தன்னுடைய சமூகத்தில் உள்ள விசயங்களில் தீவிர முறையில் தீர்வு காண முயல்வதற்கு பதிலாக, மற்றவர்கள் மீது குற்றச்சாட்டை கூறுவது என்பது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. இதுபோன்ற அடிப்படையற்ற எந்தவித மற்றும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் இந்தியா நிராகரிக்கிறது என தெரிவித்துள்ளது.