தலைப்புச் செய்திகள்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லி,

நாடாளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று முதல் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தியின் பேச்சால் நேற்று நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மக்களவை இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு சாதகமாக இருப்பதாக கூறி நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் , மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதே விவகாரத்தில் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்; நிர்மலா சீதாராமன்

மராட்டியம்: சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதி 3 பேர் படுகாயம்

தன்னம்பிக்கை அனைத்தையும் சாத்தியமாக்கும்; பிரதமர் மோடி

மனைவியுடன் தகராறு: 12 வயது மகனை குத்திக்கொன்ற தந்தை - அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது