தலைப்புச் செய்திகள்

ஹேக் செய்யப்பட்ட ரிங்கு சிங்கின் பேஸ்புக் கணக்கு: போலீசில் புகார்

ரிங்கு சிங்கின் சகோதரர் சோனு சிங், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

லக்னோ,

இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் ரிங்கு சிங். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரிங்கு சிங்கின் சகோதரர் சோனு சிங், சைபர் கிரைம் போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்; ரிங்கு சிங், கிரிக்கெட் விளையாடுவதில் முக்கியத்துவம் கொடுத்து வந்ததால், தனது பேஸ்புக் கணக்கை தொடர்ந்து கண்காணித்து வரவில்லை. இதனால் எப்போது ஹேக் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கணக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டதா? அல்லது நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.” என தெரிவித்துள்ளனர்.