உலக செய்திகள்

பின்லாந்து பள்ளியில் அதிர்ச்சி... 12 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை பலி

பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய சிறுவனை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

ஹெல்சிங்கி:

பின்லாந்து நாட்டின் வான்டா நகரில் மிகவும் பிரபலமான வீர்டோலா பள்ளி உள்ளது. ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 800 பேர் படிக்கின்றனர். ஆசிரியர்கள், பணியாளர்கள் என சுமார் 90 பேர் வேலை செய்கின்றனர்.

இந்நிலையில் இன்று பள்ளி வளாகத்திற்குள் 12 வயது சிறுவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த குழந்தைகளை நோக்கி சுட்டான். இதனால் குழந்தைகள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடினர். துப்பாக்கி சூட்டில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன், அதே வயதுடைய இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்தன. தாக்குதல் நடத்திய சிறுவனை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

தகவல் அறிந்த பெற்றோர், தங்கள் குழந்தைளை பார்ப்பதற்காக பள்ளி முன் திரண்டனர். பள்ளி வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் பெட்டேரி ஓர்போ தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் பிற மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறி உள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு