காபூல்
ஆப்கானிஸ்தானில் இன்று சுதந்திர தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைநகர் காபூலின் வஜீர் அக்பர் கான், ஷெர்போர், 1 வது மேக்ரோரியன் மற்றும் ஷாஷ்டாரக் பகுதிகளில் ராக்கெட் தாக்குதல் நடந்ததாகவும் இதில் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 9:30 மணியளவில் காபூல் நகரத்தின் பி.டி 8 மற்றும் பி.டி 17 பகுதிகளில் இரண்டு வாகனங்களில் இருந்து பல ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தன்று நிகழ்ந்த இத்தாக்குதலுக்கு தற்போது வரை தலிபான்கள் உட்பட எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை, மற்றும் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த உடனடியாக தகவல்கள் தெரியவில்லை.