Image Courtesy: AFP 
உலக செய்திகள்

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி 12 ஏவுகணைகள் வீசி தாக்குதல் - அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்

ஈரானில் இருந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி 12 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

இர்பில்,

ஈராக்கின் வடக்கு நகரமான இர்பிலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி இன்று 12 ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த ஏவுகணைகள் அண்டை நாடான ஈரானில் இருந்து இர்பிலில் நகரை நோக்கி ஏவப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் சேதம் குறித்து வெவ்வேறு கருத்துகளை தெரிவித்தநிலையில், மற்றொரு அமெரிக்க அதிகாரி ஒருவர், எந்த ஒரு அமெரிக்க அரசாங்க கட்டிடங்களில், சேதம் மற்றும் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று கூறினார். ஆனால் ஈராக் அதிகாரிகள் பல ஏவுகணைகள் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கியதாக தெரிவித்துள்ளனர். இந்த தூதரக கட்டிடம் புதியது என்றும், தற்போது இது பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள், நள்ளிரவுக்குப் பிறகு நடந்த இந்த தாக்குதலில், அப்பகுதியில் பொருள் சேதம் ஏற்பட்டதால், உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்று கூறினார். மேலும் இந்த சம்பவம் குறித்து ஈராக் அரசும், குர்திஷ் பிராந்திய அரசும் விசாரித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வியன்னாவில் தெஹ்ரானின் சிதைந்த அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள், உக்ரைன் மீதான போரை இலக்காகக் கொண்ட மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகள் பற்றிய ரஷிய கோரிக்கைகளின் மீது "இடைநிறுத்தம்" அடைந்த நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு