உலக செய்திகள்

மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து; 16 பேர் பலி

மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாயினர்.

யாங்கோன்,

மியான்மரின் கிழக்கு பகுதியில் சீனாவின் எல்லையையொட்டி உள்ள ஷான் மாகாணம், மாங்மாவோ நகரில் வெடிமருந்து அடைத்து வைக்கும் கிடங்கு உள்ளது.

நேற்று முன்தினம் மாலை வெடிமருந்தை எடுத்துச் செல்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் கிடங்குக்கு வந்தனர். அவர்கள் வெடிமருந்தை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அங்கு வெடி விபத்து நேரிட்டது.

அதனை தொடர்ந்து கிடங்குக்குள் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. கிடங்குக்குள் இருந்த அனைவரும் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்துவிட்டனர்.

மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு