உலக செய்திகள்

பாகிஸ்தானில் எல்லை தாண்டி சென்ற 2 இந்தியர்கள் கைது

பாகிஸ்தானில் எல்லை தாண்டி சென்ற 2 இந்தியர்களை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இஸ்லாமாபாத்,

இந்திய எல்லையை கடந்து பாகிஸ்தானின் கில்ஜிட்-பல்திஸ்தான் பகுதியில் நுழைந்ததாக காஷ்மீரை சேர்ந்த 2 பேரை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் பின்னர் கில்ஜிட் பகுதி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களை நேற்று செய்தியாளர்கள் முன் ஆஜர்படுத்திய மூத்த போலீஸ் சூப்பிரண்டு ராஜா மிர்சா, இந்தியர்கள் இருவரும் பாகிஸ்தானில் உளவு பார்ப்பதற்காக இந்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து இந்திய ரூபாய் நோட்டுகள், அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட இருவரும் செய்தியாளர்களிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். அப்போது தாங்கள் இருவரும் காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தை சேர்ந்த நூர் முகமது வானி, பிரோஸ் அகமது லோன் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்