உலக செய்திகள்

கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி

கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.

போகோடா,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் இருந்து நேற்று காலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இரட்டை என்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தில் விமானி உள்பட 4 பேர் பயணம் செய்தனர்.

புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு