உலக செய்திகள்

பிலிப்பைன்சில் கார் மீது லாரி மோதல் - 5 பேர் பலி

பிலிப்பைன்சில் குப்பை லாரி ஒன்று கார் மீது மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

செபு,

பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள செபு மாகாணத்தில் சாலையில் குப்பை லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த லாரி முன்னால் சென்ற காரின் மீது பயங்கரமாக மோதியது. இதை தொடர்ந்து அந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த 3 கார்கள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதி சங்கிலி தொடர் விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது