கோப்புப் படம் 
உலக செய்திகள்

மாயமான போர் விமானத்தை தேட சென்ற மீட்பு ஹெலிகாப்டர் விபத்து - 7 பேர் பலி

மாயமான போர் விமானத்தை தேட சென்ற மீட்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

புக்கரெஸ்ட்,

மாயமான போன போர் விமானத்தை தேட சென்ற மீட்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

வடகிழக்கு ருமேனியாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மிக் 21 லான்சர் என்ற போர் விமானம் கருங்கடலுக்கு அருகில் டோபிரோகியா பகுதியில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து விலகியது. அதன்பின் ரேடாரில் இருந்து மறைந்தது.

இந்த நிலையில் காணாமல் போன போர் விமானத்தை தேட ஐஏஆர் 330- புமா ஹெலிகாப்டர் சென்றது. விமானப்படை இடத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 குழு உறுப்பினர்கள் மற்றும் ருமேனிய கடற்படையைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரிக்க 2 விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக் 21 விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு