கராச்சி,
பாகிஸ்தானின் கராச்சி நகரில் மவாச் கோத் பகுதியில் லாரி ஒன்றின் மீது எறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எறிகுண்டு வீச்சில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் எறிகுண்டை தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ளனர் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கின்றது. இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.