காபூல்,
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பராஹ் மாகாணத்தின் லஷ் வா ஜூவேன் மாவட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த தலீபான் பயங்கரவாதிகள் போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களை குறிவைத்து அதிபயங்கர தாக்குதலை நடத்தினர். இதில் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியாக புதிதாக நியமிக்கப்பட்டவர் உள்பட 22 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் மாகாண போலீஸ் துணை தலைமை அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.