உலக செய்திகள்

நெதர்லாந்தில் அரசியலை விட்டு விலகும் முன்னாள் பிரதமர் ரூட்டே

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே வருகிற தேர்தலுக்கு பிறகு தான் அரசியலில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளார்.

ஹேக்,

நெதர்லாந்து நாட்டை பொறுத்தவரை அகதிகளை குடியமர்த்துவது என்பது மிகவும் தீவிர பிரச்சினையாக உள்ளது. எனவே இவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது தொடர்பான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்காததால் பிரதமர் மார்க் ரூட்டே தனது பதவியை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அவர் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அங்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மார்க் ரூட்டே வருகிற தேர்தலுக்கு பிறகு தான் அரசியலில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளார். நாட்டின் நீண்ட கால பிரதமரான மார்க் ரூட்டே அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்