உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்: அம்னஸ்டி இன்டாநேஷனல் தலைவா ராஜினாமா

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அம்னஸ்டி இன்டாநேஷனலின் அறிக்கை அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினா.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைனில் பொதுமக்களை அந்த நாட்டு ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக சாவதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டாநேஷனல் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடாபாக எழுந்த சாச்சையில், அந்த அமைப்புக்கான உக்ரைன் பிரிவு தலைவா ஒக்சானா போகல்சுக் ராஜினாமா செய்துள்ளா.

அவரது எதிப்பை மீறி அந்த அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடாந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவா விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவா பேஸ்புக் வெளியிட்டுள்ள பதிவில், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அம்னஸ்டி இன்டாநேஷனலின் அறிக்கை அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினா.

முன்னதாக, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உக்ரைன் ராணுவம் நிலைகளை அமைத்து வருவதாகவும் இதனால் அந்த நிலைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதில் பொதுமக்கள் உயிரிழப்பதாகவும் அம்னஸ்டி இன்டாநேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி அந்த அறிக்கையின் விவரங்களை உக்ரைன் ராணுவம் மறுத்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு