புதுடெல்லி,
ரூ. 8 ஆயிரம் கோடி பண மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பார்தி மற்றும் அவரது கணவர் ஷைலேஷ் குமாருக்கு எதிராக அமலாக்கத்துறை கூடுதலாக துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தலைவருமான லாலுபிரசாத் யாதவின் மகள் மிசாபாரதி, அவரது கணவர் சைலேஷ்குமார் உள்ளிட்டோர் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் 23-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது.
இந்த நிலையில் 2-வது குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்தது. இந்த 2 குற்றப்பத்திரிகைகள் குறித்து பிப்ரவரி மாதம் 5-ந்தேதி கோர்ட்டு முடிவு செய்கிறது. முன்னதாக, குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்துள்ளதற்கு அமலாக்கத்துறைக்கு கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதன் மூலம், ஒட்டுமொத்த விசாரணையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் நேற்று தெரிவித்தது. #ED #chargesheet