அபுஜா,
நைஜீரியா நாட்டின் ஓயோ தென்மேற்கு மாகாணத்தில் இபாரபா பகுதியில் இகாங்கன் என்ற இடத்தில் ஆயதமேந்திய நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர்.
அவர்கள் திடீரென அங்கிருந்த குடியிருப்புவாசிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். வீடுகளின் மீது தீ வைத்து எரித்து வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். இதில், பல கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்று ஆகியவையும் சூறையாடப்பட்டு உள்ளன.
இந்த சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். எனினும், தாக்குதல் நடத்தியவர்களில் சிலரும் உயிரிழந்து உள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் உள்ளூரில் உள்ள கண்காணிப்பு குழுவினர் சிலர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிப்படையாமல் இருப்பதற்காக கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.