உலக செய்திகள்

அசர்பைஜான் நாட்டில் ராணுவ முகாமில் குண்டுவெடிப்பு; 2 வீரர்கள் உயிரிழப்பு

தென்மேற்கு ஆசிய நாடான அசர்பைஜான் நாட்டில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் நேற்று காலை ஒரு பீரங்கி குண்டு வெடித்தது.

பாகு,

குண்டுவெடிப்பில் சிக்கி 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு வீரர் படுகாயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த வீரர் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.