கோப்புப்படம் 
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கல்வி நிலையம் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானில் கல்வி நிலையம் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரம் டஷ் - இ - பார்ஷி பகுதியில் கல்வி நிலையம் உள்ளது. அந்த கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவிகள் கூடி இருந்தனர். அப்போது, அந்த பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி திடீரென வெடிகுண்டை வெடிக்கச்செய்தான்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் நேற்று 19 பேர் உயிரிழந்திருந்த நிலையில் அந்த எண்ணிக்கை அதிகரித்தது. அந்த வகையில் கல்வி நிலையத்தில் நேற்று பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நேற்று காபூலில் உள்ள ஒரு கல்வி நிலையம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகின.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு