துபாய்,
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் நிவாரண பொருட்களை சேகரித்து வருகிறார்கள். கேரளாவை சேர்ந்த மேடை நாடக கலைஞர்கள் சுமார் 50 பேர் நடத்தி வரும் வாய்ஸ் ஆப் ஹியுமானிட்டி என்ற அமைப்பு சார்பில் முக்கிய நகரங்களில் நிவாரண பொருள் சேகரிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆடைகள், சானிட்டரி நாப்கின்கள், கழிவறை பொருட்கள், செருப்புகள் மற்றும் தின்பண்டங்கள் ஆகியவற்றை சேகரித்து வருகிறார்கள். துபாயில் மட்டும் 3 மையங்களை திறந்துள்ளனர். இந்த பொருட்கள், சரக்கு விமானத்தில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இந்த அமைப்பின் இணை செயலாளர் சுலைமான் தெரிவித்தார்.