உலக செய்திகள்

உலக வர்த்தக அமைப்பில் புகார்; இந்தியாவுடன் பேச சீனா விருப்பம்

உலக வர்த்தக அமைப்பில் புகாரை தொடர்ந்து இந்தியாவுடன் பேச சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

பீஜிங்,

இந்தியாவுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் சீனா புகார் தெரிவித்துள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரி பாகங்களுக்கான உற்பத்திசார்ந்த ஊக்கத்தொகை திட்டம், இந்தியாவில் மின்சார கார் உற்பத்தியை ஊக்குவிக்க மானியம் வழங்குதல் உள்பட 3 திட்டங்களுக்கு எதிராக புகார் செய்துள்ளது.

இந்த திட்டங்கள் சீன தயாரிப்புக்கு எதிராக பாகுபாடு நோக்கம் கொண்டது என்றும், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. முதல்கட்ட நடவடிக்கையாக, உலக வர்த்தக அமைப்பின் சர்ச்சை தீர்வு முறையின்கீழ், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கு இந்தியா இதுவரை பதில் அளிக்கவில்லை.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்