உலக செய்திகள்

ஏசு பிறந்த பெத்லகேமில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும்நிலையில், ஏசு பிறந்த பெத்லகேமில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெத்லகேம்,

ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ந்தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஏசு கிறிஸ்து பிறந்த பெத்லகேம் நகரம் தற்போது பாலஸ்தீனம் நாட்டுக்கு உட்பட்ட காசா பகுதியில் அமைந்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று பெத்லகேம் நகரில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டம் மிக சிறப்பான நிகழ்வாக கருதப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பெத்லகேம் வருவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பெத்லகேம் நகரில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் வெளிநாடுகள் மற்றும் பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெத்லகேம் நகர மேயர் ஆன்டோன் சல்மான் கூறுகையில் இந்த கிறிஸ்துமஸ் திருநாளில் பெத்லகேமில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், உள்நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள். பெத்லகேம் நகரை சேர்ந்தவர்களும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மத விழாக்கள் மட்டுமே இடம்பெறும் என கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்