உலக செய்திகள்

ரஷியாவில் ஒரே நாளில் 8,600 பேருக்கு கொரோனா தொற்று

ரஷியாவில் ஒரே நாளில் 8,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாஸ்கோ,

ரஷியாவில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 8,600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்து 481 ஆக உயர்ந்திருக்கிறது.

இதையொட்டி ரஷிய தேசிய கொரோனா பதிலளிப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில், 84 பிராந்தியங்களில் மொத்தம் 8,599 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ட்டுள்ளது. 3,777 பேருக்கு மருத்துவ ரீதியில் அறிகுறிகள் இல்லை. புதிதாக பாதிப்புக்கு ஆளானவர்களில் 2,516 பேர் மாஸ்கோவில் பதிவாகி உள்ளனர். ஏப்ரல் இறுதிக்கு பிறகு இதுதான் அங்கு குறைவான எண்ணிக்கை ஆகும் என கூறப்பட்டுள்ளது.

ரஷியாவில் 24 மணி நேரத்தில் 5,363 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்