கோப்புப்படம் 
உலக செய்திகள்

ஈரானில் புதிதாக 23,655 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 201 பேர் பலி

ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெஹ்ரான்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 13-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,655 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,64,055 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 201 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 86 ஆயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 30 லட்சத்து 86 ஆயிரத்து 017 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 2,91,446 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு