உலக செய்திகள்

விமர்சனத்திற்கு உள்ளான டிரம்ப் மனைவியின் உடை விலை ரூ.2.75 லட்சம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அணிந்து வந்த உடை விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. #DonaldTrump #Melania

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புளோரிடாவில் பால்ம் பீச்சில் உள்ள மஸ்ராலாகோ என்ற இடத்தில் புத்தாண்டை கொண்டாடினார். அதில் அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகன் பாப்ரான் டிரம்ப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற மெலானியா ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள கவுன் அணிந்து இருந்தார். இளஞ்சிவப்பு நிறத்தில் ஆன அந்த உடையில் சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் பூ வேலைப்பாடுகள் இருந்தன.

இந்த உடையை எர்டெர்ம் என்ற ஆடை நிபுணர் வடிவமைத்து இருந்தார். அது அமெரிக்கர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து டுவிட்டர் சமூக வளை தளத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மெலானியா அணிந்த உடை கலக்கலாக இருந்தது. இந்த ஆண்டு உடை கவர்ச்சிகரமாக இல்லை. கையை மறைக்கும் பகுதியில் வேலைப்பாடு சரியில்லை என சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

அதில் ஒருவரோ, 'எர்டெர்ம்' தயாரித்து கொடுத்த உடை மெலானியாவுக்கு அலங்கோலமாக இருந்தது. எனது பார்பி பொம்மைக்கு எனது தாயின் பிஸ்டிக் மற்றும் கிரயான் மூலம் கலர் அடித்தது போன்று இருந்தது என கமெண்ட்

அடித்துள்ளார்.

#DonaldTrump | #MelaniaTrump

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது