உலக செய்திகள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்

டோக்கியோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.

தினத்தந்தி

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.12 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.

50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கிழக்கு சிபா மாகாணத்திற்கு அப்பால் 35.2 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 140.5 டிகிரி கிழக்கே தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவின் 23 வார்டுகளிலும் இந்த நடுக்கம் உணரப்பட்டது. மேலும் காயங்கள் அல்லது சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு