உலக செய்திகள்

காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா வைரஸ் பாதிப்பு: 4 பேர் பலி

காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா வைரஸ் பாதிப்பு காரணமாக 4 பேர் பலியாகினர்.

கின்ஷசா,

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் தொற்று பரவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நாட்டின் வங்காட்டா பிராந்தியத்தில் 6 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் இறந்து விட்டனர். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், கொரோனா வைரஸ் மட்டுமே மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார அச்சுறுத்தல் அல்ல என்பதற்கான நினைவூட்டலாக இது அமைந்துள்ளது. எங்கள் கவனத்தின் பெரும்பகுதி கொரோனா வைரஸ் தொற்றின்மீது இருந்தாலும், பிற சுகாதார நெருக்கடிகளையும் உற்று நோக்கி கண்காணித்து பதிலளித்து வருகிறோம் என குறிப்பிட்டார். காங்கோவில் 2018-ம் ஆண்டு முதல் எபோலோ வைரஸ் தொற்று தாக்கி வருகிறது. 2,243 பேர் அதற்கு பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் இன்னும் அங்கு முடிவுக்கு வந்ததாக அந்த அரசு அறிவிக்கவில்லை. எபோலா வைரஸ், காங்கோவில் 11-வது முறையாக தாக்கத்தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு