உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு எதிரான புதிய நிதித் தடைகள்..!! ஒப்புதல் வழங்கிய முக்கிய நாடுகள்..?

உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகளில் இருந்து ரஷ்ய நாட்டு வங்கிகளை விலக்குவதற்கு முக்கிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

தினத்தந்தி

வாஷிங்டன்,

உக்ரைன் மீது தேவையற்ற போரைத் தொடுத்ததற்காக ரஷியா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் ரஷியா பொருளாதார ரீதியில் திணறுகிற நிலை உருவாகி வருகிறது. இதனிடையே ரஷிய அதிபர் புதின் மீது அமெரிக்கா நேரடியாக பாய்ந்துள்ளது. அவருக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்து நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் அமெரிக்காவில் உள்ள புதின் சொத்துகள் முடக்கப்படுகின்றன.

புதினுக்கு பக்க பலமாக இருக்கிற வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருக்கிறது. ரஷிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் மீதும் அமெரிக்காவின் பொருளாதார தடை நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இந்நிலையில் உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகள்ளுக்கான சமூகத்தில் (SWIFT) இருந்து ரஷ்ய நாட்டு வங்கிகளை விலக்குவதற்கு முக்கிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

இதன்படி உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிரான புதிய நிதித் தடைகளை விதிக்க, ஐரோப்பிய ஆணையம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளன. இதன்படி ரஷ்ய வங்கிகளை உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகளுக்கான சமூகத்தில் (SWIFT) இருந்து விலக்க ஒப்புக்கொள்கின்றன

இதுதொடர்பான வெளியான கூட்டு அறிக்கையில், ரஷியாவின் இந்த வங்கிகள் சர்வதேச நிதி அமைப்பில் இருந்து துண்டிக்கப்படுவதையும், உலகளவில் செயல்படும் அவற்றின் திறனுக்கு தீங்கு விளைவிப்பதையும் இது உறுதி செய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதன்படி ரஷ்ய வங்கிகள் தங்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வங்கிகளுடன் பாதுகாப்பாக தொடர்பு கொள்ள முடியாது என்பது இதன் அர்த்தமாகும்.

முன்னதாக தெஹ்ரானின் அணுசக்தித் திட்டத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து 2014 இல் ஈரான், உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகளுக்கான சமூகத்தில் (SWIFT) இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகளுக்கான சமூகம் (SWIFT) என்பது பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன நிறுவனமாகும், இது 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 11,000 க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே உள்ளக செய்தியிடல் அமைப்பாக செயல்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது