உலக செய்திகள்

அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்

அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கடந்த மார்ச் மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார்.

வாஷிங்டன்,

ரெக்ஸ் டில்லர்சன்க்கு பதிலாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இயக்குனர் மைக் போம்பியோவை புதிய வெளியுறவு மந்திரியாக டிரம்ப் நியமித்தார். அவரது நியமனத்தை நாடாளுமன்ற செனட் சபை ஏற்று, அவர் பதவியும் ஏற்றுக்கொண்டார்.

சி.ஐ.ஏ.யில் அவர் வகித்து வந்த பதவிக்கு கினா ஹாஸ்பெல் (61) என்ற பெண் நியமிக்கப்பட்டார்.

அவரது நியமனம் தொடர்பான ஓட்டெடுப்பு, செனட் சபையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நியமனத்துக்கு ஆதரவாக 54 ஓட்டுகள் கிடைத்தன. எதிராக 45 ஓட்டுகள் விழுந்தன. இதனால் அவரது நியமனத்துக்கு செனட் சபையின் ஒப்புதல் கிடைத்து விட்டது. அவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் 6 பேர் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

கினா ஹாஸ்பெல் நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அளித்ததும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து டிரம்ப், டுவிட்டரில் செய்தி வெளியிட்டார்.

70 ஆண்டு கால பாரம்பரியமிக்க சி.ஐ.ஏ.வின் முதல் பெண் இயக்குனர் என்ற சிறப்பை கினா ஹாஸ்பெல் பெற்று உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்