பாரிஸ்,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், அந்த நாட்டையே புரட்டி போட்டு விட்டது. அந்த நாட்டின் குடிமக்கள், தங்கள் உயிர்களைக் காப்பாற்றி கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு, இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைனை விட்டு அண்டை நாடுகளில் அகதிகளாக சென்றுள்ளதாக கூறியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 17 ஆயிரம் பேர் அகதிகளாக பிரான்சில் தஞ்சமடைந்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை மந்திரி ஜெரால்டு டர்மானின் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் வேண்டுகோளின் அடிப்படையில் ஏறக்குறைய ஒரு லட்சம் அகதிகளை பிரான்சில் தங்க வைக்க உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.