உலக செய்திகள்

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பிரான்சுக்கும் பரவியது

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பிரான்சுக்கும் பரவியுள்ளது.

தினத்தந்தி

பாரிஸ்,

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உருவாகி உள்ளது. பி.1.617 அல்லது இரட்டை பிறழ்வு திரிபு வைரஸ் என அழைக்கப்படுகிற இந்த வைரஸ், மராட்டிய மாநிலத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் வேகம் எடுப்பதற்கு இந்த வைரஸ் காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த வைரஸ் பரவல் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் கூறியது.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சிலும் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பரவியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட பெண் ஒருவருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை