பாரிஸ்,
கொரோனா தொற்றுப் பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளதால் ஊரடங்கு தேவையில்லை என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை மந்திரி கூறும் போது, பிரான்ஸில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. எனவே, ஊரடங்கு அவசியமில்லை.
கடந்த மூன்று வாரங்களாக ஒரு நாளைக்கு 20,000 பேர் என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளில் சுமார் 3,000 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.
பிரான்சில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனால் பிரான்சில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.