உலக செய்திகள்

ஈக்வடார்: சிறைச்சாலையில் இருதரப்பினர் இடையே மோதல் - 24 பேர் பலி

ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலையில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 24 பேர் உயிரிழந்தனர்.

குவைட்டோ,

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குயாக்வாலி நகரில் ஒரு சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பல்வேறு குழுக்களாக உள்ளனர். அவர்களுக்குள் அவ்வப்போது கோஷ்டி மோதல்களும் அரங்கேறிவருகிறது.

இந்நிலையில் குயாக்வாலியில் உள்ள சிறைச்சாலையில் இன்று இருதரப்பு கைதிகள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. கைதிகள் இரு தரப்பினரும் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இருதரப்பினர் இடையே நடந்த இந்த மோதலில் மொத்தம் 24 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 48 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து சிறைச்சாலையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினர் இடையேயான மோதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மோதல் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அதிகரிக்கபப்ட்டுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு