அங்கேரி,
ஹங்கேரியில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட வினோத ஓட்டப்பந்தயத்தில் ஏராளமான ஆண்கள் மேலாடைகளின்றி பங்கேற்றனர். மைனஸ் டிகிரிக்கு சற்றே குறைவான குளிரில் வெறும் கால்சட்டையும், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியும் அணிந்து பாட்டு பாடியபடி அவர்கள் ஓடியதை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர். இந்த ஓட்டப்பந்தயத்தின் மூலம் கிடைத்த நிதியை ஹங்கேரியா தொண்டு நிறுவனத்திடம் ஓட்டப்பந்தய அமைப்பாளர்கள் வழங்கினர்.