உலக செய்திகள்

வெனிசூலாவில் மனித முகத்துடன் பிறந்த பன்றிக்குட்டி: இணையத்தில் வைரலாகும் வீடியோ

வெனிசூலாவில் மனித முகத்துடன் பிறந்த பன்றிக்குட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கராக்கஸ்,

வெனிசூலா நாட்டின் லாரா மாகாணம் கியூபிராடா அரிபா நகரை சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் பன்றி சமீபத்தில் குட்டி ஈன்றது. அந்த பன்றிக்குட்டி தற்போது வலைத்தளத்தில் கவனம் பெற்று வருகிறது. அதற்கு காரணம் அந்த பன்றிக்குட்டியின் முகம் பார்க்க அப்படியே மனிதனின் முகம் போல இருப்பதுதான். அதிலும் குறிப்பாக பன்றிக்குட்டியின் முகம் குழந்தையின் முகம் போல இருக்கிறது.

பெரிய கண்கள், வாய் மட்டும் இன்றி அந்த பன்றிக்குட்டிக்கு மனிதர்களை போல தலையில் முடியும் உள்ளது. வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமான தோற்றத்தில் பிறந்த பன்றிக்குட்டியை அந்த விவசாயி வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்