உலக செய்திகள்

இந்தோனேசியாவில் புத்தாண்டு கொண்டாட்டம் ஒரே மேடையில் 450 ஜோடிகளுக்கு திருமணம்

புத்தாண்டை கொண்டாடும் விதமாக, இந்தோனேசியா நாட்டில் 450-க்கு மேற்பட்ட ஜோடியினர் நேற்று ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர்.#newyear


2017 ஆண்டு முடிந்து 2018-ம் ஆண்டு பிறந்தது.புத்தாண்டு பிறப்பு உலகம் முழுவதும் கோலாகலாமாக கொண்டாடப்பட்டது.



ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.



இந்நிலையில், இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நள்ளிரவில் 450-க்கு மேற்பட்டோர் பங்கேற்ற மெகா திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட ஜோடியினருக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமணம் செய்தவர்கள் கூறுகையில், எங்கள் திருமணத்தை எளிதில் மறக்க முடியாத விதமாக நடத்த முடிவு செய்தோம். அதற்காகவே அரசு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணம் செய்து கொண்டோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.



இந்த மெகா நிகழ்ச்சியில் திருமண ஜோடியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு