உலக செய்திகள்

நான் மிகவும் ஆபத்தானவனாக மாறப்போகிறேன்: இம்ரான் கான் திடீர் எச்சரிக்கை

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததால் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மை காட்ட முடியாததால் பதவியை பறிகொடுத்த இம்ரான் கான், பெஷாவரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது, இம்ரான் கான் கூறுகையில், நான் பிரதமராக இருந்த போது ஆபத்தானாவனாக இல்லை. ஆனால், தற்போது மிகவும் ஆபத்தானவனாக மாறியுள்ளேன். என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க சட்ட விரோத செயல்கள் நடைபெற்றுள்ளன.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் முன்பாக நள்ளிரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டது ஏன்? நான் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பானதை செய்து விட்டேனா? இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி மக்கள் தாங்கள் விரும்பியதை வெளிப்படுத்தலாம் என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு