கோப்புப்படம் 
உலக செய்திகள்

துபாய்: பள்ளி பஸ்சை திருடி விற்ற இருவருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில்

துபாயில் பள்ளி பஸ்சை திருடி விற்ற இருவருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

துபாய்,

துபாயில் உள்ள தனியார் நிறுவனம் அருகே பள்ளிக்கூட மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் பஸ் ஒன்று நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த பஸ் திடீரென்று காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த பகுதியில் உள்ள குடோனில் வேலை பார்த்து வந்த 2 பேர் பஸ்சை திருடி சார்ஜாவில் உள்ள கார் நிறுவனத்தில் 34 ஆயிரம் திர்ஹாமுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பஸ்சை திருடி விற்ற 2 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், 84 ஆயிரம் திர்ஹாம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை