உலக செய்திகள்

இந்திய, ஜப்பான் உறவு வலுவாகிறது இந்தியர்கள் மத்தியில் மோடி பேச்சு

இந்தியா ஜப்பான் உறவு வலுவாகிறது என்று ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி பேசினார்.

தினத்தந்தி

கோபே,

ஜப்பானில் ஒசாகா நகரில் இன்று தொடங்குகிற ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.

நேற்று அவர் கோபே நகரில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமராக இருந்த வாஜ்பாய், ஜப்பான் பிரதமராக இருந்த யோசிரோ மோரியை சந்தித்து பேசியபோது, இரு நாட்டு உறவு உலகளாவிய கூட்டமாக மாறியதாக நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, புதிய இந்தியாவில் இரு நாட்டு உறவு மேலும் வலுவடைகிறது என கூறினார்.

சமீபத்தில் இந்தியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜப்பான் வாழ் இந்தியர்களின் பங்களிப்புக்காக அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும் இந்தியாவும், ஜப்பானும் இணைந்து ஒரு காலத்தில் கார் தயாரித்த நிலையில், இப்போது புல்லட் ரெயிலை உருவாக்குவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது