உலக செய்திகள்

ஈரான்: 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி சாதனை

விண்ணில் ஏவிய 3 செயற்கைகோள்கள், தகவல் தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் குறித்த பயன்பாட்டுக்கு உதவும் என ஈரான் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

ஜெருசலேம் ,

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சொந்த தயாரிப்பான சிமோர்க் ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஈரான் விண்வெளி நிறுவனம் தயாரித்துள்ள இந்த செயற்கைக்கோள்கள், தகவல்தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் குறித்த பயன்பட்டுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் சோதனைகள் நடத்தியிருப்பதன் மூலம், ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தீர்மானத்தை மீறி ஈரான் செயல்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அணு ஆயுத திறன் வாய்ந்த எவ்வித பாலிஸ்டிக் ஏவுகணைகள் சோதனை முயற்சிகளையும் ஈரான் மேற்கொள்ளக் கூடாது எனவும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு