உலக செய்திகள்

ஈராக்: திருமண நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து; 100 பேர் உயிரிழந்த சோகம்

ஈராக்கில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 100 பேர் உயிரிழந்த சோக சம்பவம் ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

பாக்தாத்,

ஈராக் நாட்டின் வடக்கே நைன்வே மாகாணத்தில் ஹம்தனியா நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலர் சிக்கி கொண்டனர்.

திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற முடியாமல் அவர்கள் திணறினர். மண்டபம் முழுவதும் கரும்புகை பரவியது. இதனால், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் 100 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி முதற்கட்ட விசாரணையில், நிகழ்ச்சியில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், அந்த மண்டபத்தில் தீப்பற்றி கொண்டது என கூறப்படுகிறது.

அதிகம் தீப்பற்ற கூடிய பொருட்கள் அந்த மண்டபத்தில் இருந்துள்ளன. பாதுகாப்பு நடைமுறைகள் குறைபாடும் இதற்கு ஒரு காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை