அவர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து யூப்ரடீஸ் நதியின் கிழக்கு கரை பகுதியை நோக்கி சென்று அங்கு கூடியிருந்தனர். இந்த நிலையில் அவர்களை இலக்காக கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் புலம் பெயர்ந்த மக்களில் 12 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 12க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர். இந்த தகவலை இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.