உலக செய்திகள்

இஸ்ரேலில் 4-வது ‘டோஸ்’ தடுப்பூசி திட்டம் விரிவாக்கம்: சுகாதார அமைச்சகம்

இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் 4-வது ‘டோஸ்’ தடுப்பூசி (இரண்டாவது பூஸ்டர் ‘டோஸ்’) போடும் திட்டம் அறிமுகம் ஆகிறது.

தினத்தந்தி

முதல் கட்டமாக அங்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு 4-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து அங்கு 4-வது டோஸ் தடுப்பூசி திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுகிற டாக்டர்கள், பணியாளர்களுக்கு 4-வது டோஸ் தடுப்பூசி போட சுகாதார அமைச்சகம் முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேலில் 95 லட்சம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 42 லட்சம் பேர் 3 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 4-வது டோஸ் தடுப்பூசி போடுவது குறித்து சுகாதார அமைச்சகத்தின் நிபுணர் குழு இன்னும் பரிந்துரை செய்யவில்லை. எனவே முதலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும், ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கும் 4-வது டோஸ் தடுப்பூசி போடுவது அடுத்த சில நாட்களில் தொடங்கும்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்