உலக செய்திகள்

நீர் மற்றும் விவசாயங்களில் இஸ்ரேல், உலக நாடுகளுக்கு முன்னோடி - பிரதமர் மோடி

நீர் மற்றும் விவசாயங்களில் இஸ்ரேல், உலக நாடுகளுக்கு முன்னோடி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இஸ்ரேல்,

இந்தியா-இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டதன் 25-ம் ஆண்டு நினைவாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். தனி விமானம் மூலம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் சென்று இறங்கிய மோடியை, அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ விமான நிலையத்துக்கே வந்து சிறப்பாக வரவேற்றார். இஸ்ரேலில் 3 நாள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி அங்கே பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் இந்தியா - இஸ்ரேல் இடையே விண்வெளி ஆய்வு ஒத்துழைப்பு தொடர்பாக 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ செய்தியார்களிடம் கூறுகையில்,

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து போராடும். இரு நாடுகளும் இணைந்து வரலாறு படைத்துள்ளன.

அதனைதொடர்ந்து பிரதமர் மோடி செய்தியார்களிடம் கூறியதாவது:

நீர் மற்றும் விவசாயங்களில் இஸ்ரேல், உலக நாடுகளுக்கு முன்னோடி. இருநாடுகளும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட உறுதி பூண்டுள்ளது. இஸ்ரேல் பயணத்தை பெருமையாக கருதுகிறேன். உலகப் போரின் போது 44 இந்திய வீரர்கள் இஸ்ரேலில் உயிர்த் தியாகம் செய்தனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்