ஜெருசலேம்
அடுத்த வாரம் ரஷ்யாவின் கடற்கரை சுற்றுலாத் தலமான சோசியில் இச்சந்திப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆறு வருடங்களாக சிரியாவில் நடந்து வரும் சண்டையில் ஈரானின் பங்களிப்பால் அப்பகுதியில் அந்நாடு செல்வாக்கு பெற்று வருவதாகவும், ஈரான் தனது செல்வாக்கை ஹிஸ்புல்லா போன்ற குழுக்கள் மூலமும் செலுத்தி வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது. இஸ்ரேலை எதிர்ப்பதில் ஈரான் முக்கியமான பங்காற்றி வருகிறது. சிரியாவில் அதிபர் அஸாத்தின் ஆட்சியை ஈரானும், ரஷ்யாவும் கடுமையாக ஆதரித்து வருகின்றன.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேலும் ரஷ்யாவும் தவறுதலாக ஒருவர் மீது மற்றொருவர் தாக்குதல் நடத்துவதை தவிர்க்கும் ஒப்பந்தம் ஒன்றை செய்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.