உலக செய்திகள்

ஜப்பான்: அமெரிக்க ராணுவ விமானம் நொறுங்கி விழுந்ததில் ஒருவர் பலி; 7 பேர் மாயம்

இதனை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு ரோந்து படகு மற்றும் விமானம் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

டோக்கியோ,

ஜப்பானின் ககோஷிமா மாகாணத்திற்கு தெற்கே அமைந்த யகுஷிமா தீவின் கடலோர பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, அந்த விமானம் திடீரென நேற்று மதியம் விபத்தில் சிக்கியது. இதுபற்றி கடலோர காவல் படைக்கு 2.47 மணியளவில் தகவல் சென்றது. இதனை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு ரோந்து படகு மற்றும் விமானம் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன.

அதற்கு முன் ககோஷிமா விமான நிலையத்திற்கு, விமானம் அவசரகால தரையிறக்கம் செய்வதற்கான அழைப்பு ஒன்று அமெரிக்க ராணுவத்திடம் இருந்து சென்றுள்ளது.

எனினும், அது அமெரிக்க கடற்படை அல்லது விமான படையிடம் இருந்து வந்த கோரிக்கையா? என அதிகாரிகள் குறிப்பிடவில்லை.

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். விமானத்தில் இருந்த மற்ற 7 பேரின் நிலைமை தெரிய வரவில்லை. விபத்திற்கான காரணமும் தெரியவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்